ராமநாதபுரம் மாவட்டம் சின்னநாகாச்சி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குடும்பம் நடத்த வர மறுத்ததால் காதல் மனைவி கழுத்தை கயிற்றால் நெறித்த கணவன்! பிறகு நேர்ந்த விபரீதம்
ராமநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜா இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த சிவகாமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் அவர்கள் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ராஜா குடித்துவிட்டு வந்து சிவகாமியை தினமும் அடித்து துன்புறுத்தி உள்ளதாக தெரிகிறது, இந்நிலையில் சிவகாமி கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கணவர் மற்றும் மாமியார் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்நிலையில் புகாரின் பேரில் காவல்துறையினர் ராஜாவின் வீட்டிற்கு வந்து அவர்களை மிரட்டி சென்றுள்ளனர். இந்நிலையில் ஆத்திரமடைந்த ராஜா தனது மனைவியை ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார்.
இதையடுத்து சிவகாமி தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார் அப்போதும் பின் தொடர்ந்த அவரது கணவர் ராஜா நடுவழியில் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராஜா அங்கிருந்த ஆடு கட்டும் கயிறு ஒன்றை எடுத்து சிவகாமியின் கழுத்தை இறுக்கி உள்ளார்.
இதனால் மூச்சு விட முடியாமல் சிவகாமி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்த போது சிவகாமி இறந்து கிடந்துள்ளார் பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கொலைக்கு காரணமாக இருந்த அவரது கணவர் ராஜா தலைமறைவாகி விட்ட நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.