வேர்ல்ட்கப் 2019 காண்டெஸ்டில் வெல்பவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இலவச பிரியாணி வழங்கப்படும் என்று ஹைதராபாத் பேரடைஸ் உணவகம் அறிவித்துள்ளது.
ஒரு வருடத்திற்கு இலவச பிரியாணி! பேரடைஸ் பிரியாணியின் அதிரடி சலுகை! ஏன் தெரியுமா?
ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மோகம் ரசிகர்களை அதிதீவிரமாக ரசிகர்களை பற்றியிருக்கும் நிலையில், ஐதராபாத் பேரடைஸ் உணவகம் அதனை யே தனது விளம்பர உத்திக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது.
இந்த உணவகத்தின் சார்பில் வேர்ல்டு கப் வித் ஹைதராபாத் பேரடைஸ் காண்ட்டெஸ்ட் என்ற பெயரிலான போட்டி ஒன்று நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள ஹைதராபாத் பேரடைஸ் உணவகங்களில் கடந்த 7-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 18-ஆம் தேதி வரை காண்ட்டெஸ்ட் நடைபெறுகிறது.
இதில் வாரம் தோறும் வெல்பவர்களுக்கு ஓராண்டு பிரியாணி பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரம் தெரிந்துகொள்ள ஹைதராபாத் பேரடைஸ் உணவகங்களுக்கோ, எக்ஸ்பிரஸ் அவுலெட்டுகளுக்கோ செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்து.