பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாலே எசகுபிசகாக பேசத்தான் வேண்டியிருக்கும் போல. இந்து மதத்தைத் தூக்கிப்பிடிக்க எதையும் பேசுவார்கள் என்பதற்கான சமீபத்திய உதாரணம் புதுவை ஆளுநர் கிரண் பேடி.
கிரண் பேடி படிச்சுத்தான் பாஸ் ஆனாரா..? ரவுண்டு கட்டி வெளுக்கும் நெட்டிஷன்கள்!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_17161_1_medium_thumb.jpg)
அதாவது, விண்வெளி எனும் பிரபஞ்சத்தில் எந்த ஒலியும் கிடையாது என்பதுதான் இதுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், ’சூரியனில் 'ஓம்' என்ற சத்தம் கேட்பதை நாசா ரெகார்ட் செய்துள்ளது” என்று புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ட்வீட் செய்தார்.
இவ்வளவு போதாதா நமது நெட்டிஷன்களுக்கு ஆளாளுக்கு அவரை கலாய்க்கத் தொடங்கிவிட்டார்கள். விண்வெளியில் பசுமாடு படம் தெரிகிறது, சிவன் டான்ஸ் ஆடுகிறார் என்று நாசா உறுதிபடுத்தியிருக்கிறது என்றெல்லாம் கிண்டல் செய்து பதிவு போடுகிறார்கள்.
இன்னும் ஒருவர் மேலே போய், ‘கிரண்பேடி படித்துத்தான் பாஸ் ஆனாரா அல்லது பசுமாடு மேய்த்து பதவிக்கு வந்தாரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். என்னம்மா கண்ணுங்களா, கவர்னருன்னு கொஞ்சம் கவுரதை கொடுக்கிறது இல்லையா?