நிஜமாகவே ரஷ்யா கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதா..? அதிர்ச்சியில் அமெரிக்கா.

இப்போது கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் ரஷ்யா முந்திக்கொண்ட தகவல் தெரியவர, அமெரிக்கா அதிர்ந்துள்ளது.


ரஷ்ய நாட்டை சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரான்ஸ்லேஸ்னல் மெடிசன் அண்ட் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் வாடிம் டாரசோவ், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உருவாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கான சோதனை மனிதர்களிடம் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கமலே இன்ஸ்டிடியூட் ஆஃப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய இந்த தடுப்பு மருந்து குறித்துபேசிய இயக்குனர் அலெக்சாண்டர் லுகாசேவ், "இந்த கட்டத்தில் நாங்கள் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பானதா, இல்லையா என்பதை கண்டறிவதையே நோக்கமாக கொண்டிருந்தோம். பரிசோதனையின் முடிவில் இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்..

இந்த மருந்து விற்பனைக்கு வருவதற்கு முன்னர், அமெரிக்கா சார்பில் வேறு ஒரு மருந்தை களத்தில் இறக்கும் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறதாம். நல்லா போடுறாங்க போட்டி.