பல்கேரியாவில் நடைபெறும் சந்தை திருமணம் மற்ற நாட்டவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
திருமணச் சந்தை! இளம் பெண்களை அழைத்து வரும் பெற்றோர்! காசு கொடுத்து வாங்கிச் செல்லும் ஆண்கள்! எங்கு தெரியுமா?
பல்கேரியாவில் மிக வறுமையுடன் வாழும் ஜிப்ஸி இன மக்கள் தங்களுக்கு திருமண வயதாக 20 வயதை நிர்ணயித்து கொண்டுள்ளனர். அதன்படி 20 வயதைக் கடந்தோர் திருமண வயதை கடந்தவர்கள் என்ற எண்ணம் ஜிப்சி இன மக்களிடையே தோன்றிவிடுகிறது.
20 வயது ஆவதற்கு முன்பே ஜிப்ஸி இன மக்கள் திருமணம் செய்து விடுவர். இதை முன்னிட்டு திருமண சந்தையானது பல்கேரியாவின் மேகலாயா என்னும் கிராமத்தில் நடத்தப்படும். இந்த சந்தையில் தான் ஆண்கள் தனக்கு பிடித்த பெண்களை விலை கொடுத்து தேர்வு செய்வர்.
அதன்படி வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான திருமண வயதை எட்டிய ஆண்கள் பெண்கள் இந்த சந்தையில் பங்கேற்பர். குதிரை மைதானம் இருக்கக்கூடிய பகுதியில்தான் இந்த சந்தை நிகழ்ச்சி நடைபெறும். இந்த சந்தையில் ஆடல் பாடல் என பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ,பொழுது போக்கு நிகழ்ச்சிகளுடன் அழகான பெண்களும் இருப்பர்.
ஆண்கள் தனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்து அவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்துவர். ஒரு பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் தேர்வு செய்தால் அந்த பெண்ணின் வரதட்சணை மதிப்பு கூடிக்கொண்டே இருக்கும். அதன்படி இறுதியாக யார் அதிக விலை செலுத்துகிறார்களோ அவர்களுக்கே அந்த அழகான பெண் சொந்தமாவார்.
இது ஜிப்ஸி இன மக்களிடையே பல்கேரியாவில் காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு சம்பிரதாய நிகழ்வு ஆகும் இது மற்ற நாட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஏனென்றால் இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள்தான் ஆண்களுக்கு வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து கொள்வர் ஆனால் பல்கேரியாவில் சற்று வித்தியாசமான முறையில் திருமணம் நடைபெறுவது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.