கன்னியாகுமரியில் அருங்காட்சியகம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் விஜய்யின் மெழுகு சிலையை பல்வேறு தரப்பினர் பார்த்து ரசித்து வரும் நிலையில் செல்பியும் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
பிக்பாஸ் கவினுக்கு மெழுகு சிலை..! கன்னியாகுமரி விஜய் ரசிகர்கள் அசத்தல்! ரகளை ரக காரணம்!
பிகில் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன நிலையில் கன்னியாகுமரியில் அருங்காட்சியகம் ஒன்றில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் சிலர் மெழுகு சிலை தயாரித்து காட்சிப்படுத்தியுள்ளளனர். மேலும் விஜய் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ள அதே அருங்காட்சியகத்தில் அமிதாபச்சன் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
சினிமா ரசிகர்கள் பலர் அருங்காட்சியகத்திற்கு வந்து அந்த மெழுகு சிலை அருகே செல்ஃபி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இந்த புகைப்படங்களை இணையத்தில் பார்க்கும் பலர் வழக்கம்போல் கலாய்த்து வருகின்றனர். அந்த விஜய் சிலை, நடிகர் விஜய் மாதிரி இல்லை என்றும் பிக்பாஸ் கவின் மாதிரி இருப்பதாகவும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய் இளைஞனாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்கிறது அந்த சிலை. விஜய்யின் இந்த மெழுகு சிலை நடிகர் விஜய் மாதிரி இல்லை என பல விஜய் ரசிகர்களே இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த சிலையை பார்க்கும்போது பிக்பாஸ் கவின் மாதிரி இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலரர் காமெடி நடிகரும், டிவி தொகுப்பாளருமான ஈரோடு மகேஷ் மாதிரி இந்த சிலை இருக்கிறது என பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.