கையில் மண்ணெண்ணெய் கேன்! முதலில் மாமியார் பிறகு மருமகள்! பெரம்பலூரை உலுக்கிய தீக்குளிப்பு! பதற வைக்கும் காரணம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் வீட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து நீர்த்தேக்கத்தொட்டியும், காம்பவுண்ட் சுவர் கட்டிய ஊராட்சி மன்றத்தை எதிர்த்து தீக்குளித்த பெண்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் மேலஉசேன் கிராமத்திலுள்ள சீமான் குளத்தின் கரை பகுதியில் வசித்து வருபவர் ராமதாஸ் இவரது மனைவி பூங்கொடி. இவர்கள் தனது மகன் குமரேசன் மற்றும் மருமகள் தங்கலட்சுமி ஆகிய இருவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஊராட்சிமன்ற நிர்வாகத்தால் தங்களது வீட்டுக்கு செல்லும் பாதையில் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போர்வேல்லில் இருந்துதான் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் போர்வெல் இருக்கும் இடத்திற்கு அருகே மோட்டார் ரூம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கட்ட வேண்டும் மற்றும் அதனை சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்ப வேண்டும் என்று ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காம்பவுண்ட் சுவரின் பின் பகுதியில் உள்ள ராமதாஸ் குடும்பத்தாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது வீட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து கட்டகூடாது என்று ஊராட்சி மன்றத்தில் பலமுறை புகார் அளித்துள்ளார். இதையடுத்து பாதையை சீர் அமைத்து தரவும் வேறு இடத்தில் நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை தொடர வேண்டும் என தீர்ப்பு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் போர்வெல் ஒன்று பழுதாகியுள்ளது. இதையடுத்து அங்கு புதிதாக போர்வெல் அமைப்பது மற்றும் மோட்டார் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது இதனால் ராமதாஸ் குடும்பத்தார் அங்கு சென்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் ஆத்திரம் அடைந்த பூங்கொடி மற்றும் அவரது மருமகள் தங்கலட்சுமி ஆகிய இருவரும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொண்டனர். இதையடுத்து அருகில் இருந்தால் உடனே ஓடி வந்து அவர்களை காப்பாற்ற முயன்றனர் அவர்கள் இருவரையும் காப்பாற்றி அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டபோது பூங்கொடி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது ஒரு டெஸ்ட் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி ஊராட்சி செயலாளர் கலையரசி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாமியார் மருமகள் இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.