ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு மண்ணில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை புரிந்துள்ளது.
இந்திய அணியை கவிழ்க்க இந்தியாவில் சதி! கதறும் ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை டெஸ்ட் தொடரில் இந்திய அணி எழுதுவது இதுவே முதல் முறை ஆகும்.விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த வரலாற்றை படைத்துள்ளது. உலகக் கோப்பை வெற்றியை காட்டிலும் இது மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாக விராட் கோலி பெருமிதம் தெரிவித்திருந்தார். இந்திய அணியை முன்னணி ஜாம்பவான்கள் பலரும் மனதார பாராட்டி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார் இதுதொடர்பாக சிட்னியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது பேசிய அவர் இதுதான் உண்மையான கிரிக்கெட் என்று கூறினார்.
இளம் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த உள்ளதாக குறிப்பிட்டார். ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் மிட்செல் ஜான்சன் இந்திய அணியை பாராட்டியிருப்பது குறித்து பேசிய அவர் இந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது எவ்வளவு கடினம் என்பது மிச்சல் ஜான்சனுக்கு தெரியும் என்று குறிப்பிட்டார்.
உலகக்கோப்பை தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் வீரர்கள் விளையாடுவது சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, உலகக்கோப்பை மனதில் வைத்து ஐபிஎல் தொடரை பார்க்கப் போவதாகவும் அதில் வீரர்கள் விளையாடுவது குறித்து மதிப்பிட போவதாகவும் ரவி சாஸ்திரி பதிலளித்தார்.
ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடுவதை விராட் கோலி மிகவும் ரசித்ததாக கூறிய ரவிசாஸ்திரி அவர் ஒரு போராளி என்று புகழாரம் சூட்டினார். அணி மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அவர் விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டே தான் இருப்பார்கள் என்று தெரிவித்தார் கடந்த 3 ஆண்டாக இந்திய அணி முதலிடத்தில் இருப்பதை சுட்டிக் காட்டிய ரவிசாஸ்திரி விமர்சனம் செய்து கொண்டிருப்பவர்கள் காலப்போக்கில் தாங்கள் செய்யும் விமர்சனத்தால் ஒன்றும் நடந்து விடப்போவதில்லை என்பதை உணர்வார்கள் என்று தெரிவித்தார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மண்ணை கவ்வ வேண்டும் என்று இந்தியாவில் உள்ள சிலர் விரும்பியதாகவும், இதனால் அணிக்கு எதிராக அவர்கள் சதி செய்ததாகவும் சாஸ்திரி கூறியுள்ளார். ஆனால் இதனை எல்லாம் மீறி இந்தியா வாகை சூடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.