சான்றிதழ் கேட்டு அணுகிய கணவனை இழந்த விதவை! படுக்கைக்கு அழைத்த அதிகாரி! வேலூர் சம்பவம்!

வேலூர் மாவட்டத்தில் விதவை சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகத்தை அணுகிய பெண்ணிற்கு வருவாய் ஆய்வாளர் செல்போனில் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்நிலையில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி ,கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அரசு உதவித் தொகை பெறுவதற்காக விதவை சான்றிதழ் கேட்டு கடந்த சில மாதங்களாக அஞ்சலி வருவாய்த்துறை அலுவலகம் வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் விதவைச் சான்று கேட்டு வருவாய் துறை அதிகாரியான ஜெயக்குமார் என்பவரை சந்தித்துள்ளார். இந்நிலையில் ஜெயக்குமார் அஞ்சலியின் மொபைல் எண்ணை பெற்று கொண்டு அவரது எண்ணிற்கு தினமும் பாலியல் ரீதியாக செய்தியை அனுப்பி வந்துள்ளார். மற்றும் போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த அஞ்சலி இதுகுறித்து தனது சகோதரர்களிடம் தெரிவித்துள்ளார். சகோதரர்கள் வருவாய் துறை அலுவலகம் சென்று ஜெயக்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்நிலையில் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த டி.ஆர்.ஓ அவரை பணியிடை நீக்கம் செய்ய ஆணை பிறப்பித்தார். இதனடிப்படையில் வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.