ஈரோடு மாவட்டம் பவானி அருகே பள்ளி மாணவிகள் இருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த வழக்கில் 10 மாதங்களுக்கு பிறகு லாரி ஓட்டுநர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
10 மாதங்களுக்கு முன் மர்ம மரணம்! தோழிகள் இருவர் சாவுக்கு காரணமான லாரி டிரைவரை காட்டிக் கொடுத்த வாட்ஸ்அப் போட்டோ! சினிமாவை மிஞ்சும் பரபரப்பு!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மைக்கேல்பாளையத்தை சேர்ந்த இரு மாணவிகள் விடுமுறையின் போது வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பாததால் அவர்களை காணவில்லை என பெற்றோர்களும் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர் .இதையடுத்து 3 நாட்கள் கழித்து அத்தானி அருகே பவானி ஆற்றில் அவர்களது உடல் சடலமாக மிதந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்பக்கூடல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மாணவிகளின் இறப்பு குறித்த வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காவல்துறை விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில் மாணவிகளின் பெற்றோர்கள் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் வழக்கு சிபிசிஐடி கைவசம் சென்றது. இதையடுத்து விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர் அப்போது மாணவியின் செல்போன் எண்ணிற்கு அவர்கள் ஆற்றங்கரை ஓரம் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டது போல் அவர்களது கைப்பேசிக்கு புகைப்படம் ஒன்று வந்துள்ளது.
அதை அனுப்பியது யார் மற்றும் ஆற்றங்கரைக்கு இரு மாணவிகளும் எப்போதும் சென்றார்கள் என்பது குறித்து விசாரித்தபோது மனைவிகள் இருவரும் விடுமுறை நாட்களில் துணி கடைக்கு வேலைக்கு சென்று வந்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மாணவியின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து பார்த்தபோது பவானியை அடுத்துள்ள பருவாச்சி கல்லாங்காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்த செங்கல் சூளை லாரி ஓட்டுநர் நந்தகுமார் என்ற இளைஞரிடம் மாணவிகளுக்கு பழக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று மாணவிகள் இருவரும் நந்தகுமாருடன் ஆற்றங்கரைக்கு குளிக்கச் சென்றதாகவும் அங்கு அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் போலீசார் சந்தேகித்தனர். லாரி ஓட்டுனர் நந்தகுமார் காவல்துறையினர் தன்னை நெருங்கி வருவதை அடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று சரணடைந்துள்ளார்.
இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர்பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டில் இருந்து மாணவிகளை அழைத்து சென்றது, விபத்து நிகழும் என்று தெரிந்தும் தடுக்காமல் விட்டது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாவனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.