அரசு ஊழியர்களுக்கு அடிச்சாச்சு லக்கி பிரைஸ்... சட்டசபையில் முதல்வர் எடப்பாடி சர்ப்ரைஸ் அறிவிப்பு

ஒவ்வொரு சட்டசபைக் கூட்டத்தின்போதும் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் ஏராளமான அறிவிப்புகளை செய்துவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி இன்று அரசு ஊழியர்களுக்கு சந்தோஷமளிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியிலிருந்து ஒய்வு பெறும் வயது, 58-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது. அரசு பணியாளர்களின் ஒய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது 31.5.2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று கூறியிருக்கிறார்.