மதுரையில் எடப்பாடி பழனிசாமிக்கு மெகா அவமானம்

10 தொகுதியில் டெபாசிட் போச்சு


எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. மெகா தோல்வியை தழுவியிருக்கிறது. தோல்வி, வெற்றி என்பதெல்லாம் அரசியலில் சகஜம் என்றாலும் மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்சென்னை, வேலூர், தேனி, புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது.

இதில் மதுரை தோல்வி மெகா மெகா கேவலம். ஏனென்றால் மதுரையை அ.தி.மு.க.வின் கோட்டை என்றே சொல்லலாம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்து பெரும்பாலான தேர்தல்களில் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது. தோல்வி என்றாலும் குறைந்த வித்தியாசத்திலான தோல்வியாக இருக்கும்.

ஆனால், இந்த தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு அ.தி.மு.க. தள்ளப்பட்டது மெகா அதிர்ச்சி. எதிர்க் கூட்டணியில் ஒரு மிகப்பெரிய தலைவர் இருந்த காரணத்தால் இப்படி நடந்தது என்றாலும் ஏற்றுக்கொள்ளலாம். எந்த வகையிலும் செல்வாக்கு இல்லாத ஒரு நபரிடம் அ.தி.மு.க. வேட்பாளர் தோற்றுப்போய் பா.ஜ.க.வுக்குப் பின்னே நிற்கும் அளவுக்கு மோசமாக வாக்குப் பதிவாகியுள்ளது.

தென் சென்னை, மத்திய சென்னை, கோவை, நீலகிரி, இராமநாதபுரம், திருநெல்வேலி, தேனி, தர்மபுரி போன்ற இடங்களில் எல்லாம் பாஜகவும் அதன் கூட்டணி வேட்பாளர்களும் இரண்டாம் இடம் வந்தார்கள் என்றாலும் இங்கெல்லாம் கொஞ்சம் பெரிய தலைகள் நின்றார்கள்.

ஆனால், மதுரையில் பேராசிரியர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் ராம சீனிவாசன் இரண்டாம் இடம் வந்தது உண்மையிலேயே மிகப்பெரிய அதிர்ச்சி. இதற்கு முக்கியமான காரணம் டாக்டர் சரவணன் என்கிறார்கள். அவரை சர்வகட்சி சரவணன் என்று தான் இந்த பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

அதனால் சௌராஷ்டிர மக்களும் முக்குலத்தோர் மக்களும் அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடவில்லை என்கிறார்கள். அதோடு ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ போன்றவர்களும் சரவணனை கண்டுகொள்ளவே இல்லையாம். இப்படியெல்லாம் அவமானம் தேவையா எடப்பாடி பழனிசாமிக்கு..? உருப்படியாக வேட்பாளர் போடத் தெரியாத எடப்பாடி பழனிசாமியால் அ.தி.மு.க.வுக்குத் தான் அவமானம்.