நரேந்திர மோடியின் முதல் ஆட்சி காலத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜி.எஸ்.டியு.தான் பொதுமக்களை பாதித்த விஷயங்கள். ஆனால், இரண்டாவது ஆட்சி ஆரம்பமே அதிரடிதான்.
மோடியின் இரண்டாம் ஆண்டு ஆரம்பம்.. லாபம் யாருக்கு... நஷ்டம் யாருக்கு? சூப்பர் ரிசல்ட்..?
ஆம். ராமர் கோயில், முத்தலாக், ஜம்மு காஷ்மீர் என்று ரவுண்டு கட்டி ஆரம்பமே படு அசத்தலாகவும் படு விரைப்பாகவும் இருந்தது.
ஆனால், அத்தனை விவகாரத்தையும் ஒரே அடக்கில் முடித்தேவிட்டது கொரோனா. ஆரம்பத்தில் வீராவேசமாக போட்ட நடவடிக்கைக்குப் பதிலாக, அலுவலகத்திலேயே முடங்கவேண்டிய நிலைமைக்கு மோடியும் ஆளாகிவிட்டார்.
இந்த நிலையில், ஒரு சர்வே ஆளும் கட்சி சார்பாக எடுக்கப்பட்டுள்ளது. அதில், 61 சதவீதம் பேர் மோடியின் செயல்பாடுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். தேர்தல் நேரத்திலும், இதுபோன்ற நேரங்களிலும் அரசுக்கு ஆதரவாகத்தா கருத்துக்கணிப்புகள் இருக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை.
மற்ற விவகாரங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருந்த அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்ததில்தான் கோட்டைவிட்டது. அதேபோன்று தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க மத்திய அரசு அளித்த ஒப்புதல் மற்றொரு விஷயமும் நாடெங்கும் சிறுபான்மையினரை பதற்றமடைய செய்தது. அதைவிட அனைவரையும் ஒன்று கூட வைத்தது.
நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற காரணத்தால், பொருளாதாரம் அடிமட்டத்திற்குப் போன நேரத்தில், கொரோனா வைரஸ் வந்து மோடியை காப்பாற்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மோதி முடக்கநிலையை தாமதமாக அறிவித்த காரணத்தால் மோடியின் மீது அதிருப்தி நிலவியது. அதன் பிறகு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாடெங்கும் நடந்துபோன விவகாரம், மோடி அரசு மீது மேலும் டென்ஷனை ஏற்படுத்திவிட்டது.
எப்படியாயினும் இன்னும் ஆறு மாதங்களுக்கு இந்தியாவால் மூச்சுவிடவே முடியாது என்பதும் மோடியின் தோல்வியாகவே பார்க்கிறது. ஆகவே, இரண்டாவது ஆட்சியின் முதல் ஆண்டிலேயே தோல்வியைத் தழுவியிருக்கிறார் மோடி.