பெற்ற தாயையே பணம் கேட்டு மகன் கொலை செய்த சம்பவமானது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பங்களா வீட்டுக்குள் அலறல் சப்தம்! ஓடிச் சென்றவர்களை அதிர வைத்த காட்சி! ரத்த வெள்ளத்தில் தாய்! கையில் கத்தியுடன் மகன்!
திருப்பூர் மாவட்டத்தில் காசிபாளையம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு சேகர் என்பவர் வசித்து வந்தார். அவருடைய மனைவியின் பெயர் ஆரோக்கியமேரி. இத்தம்பதியினருக்கு ஒரு மகனும், இரு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 4 வருடங்களுக்கு முன்னர் சேகர் உயிரிழந்தார். சேகர் நடத்தி வந்த பின்னலாடை நிறுவனத்தை ஆரோக்கியமேரி முன்னெடுத்து நடத்தி வந்தார்.
நேற்று திடீரென்று நிறுவனத்தின் முதல் தளத்தில் அலறல் சத்தம் கேட்டது. உடனடியாக பணியாளர்கள் விரைந்து சென்றனர். அப்போது ஆரோக்கியமேரி வயிற்றில் காயமடைந்து அலறியுள்ளார். பதறிய பணியாளர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டின் ஒரு ஓரத்தில் ஹர்ஷித் அழுது கொண்டிருந்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹர்ஷிதிடம் விசாரணை நடத்தினர். சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஹர்ஷித் தன் தாயிடம் பணத்தை கேட்டு அடிக்கடி தொல்லை செய்து வந்தது தெரிந்துள்ளது. நேற்று பணம் தர ஆரோக்கியமேரி மறுத்துள்ளார்.
உடனடியாக ஆத்திரமடைந்த ஹர்ஷித் தன் தாயையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த சம்பவமானது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.