தமிழ், இந்தி, மலையாளம் என ஒரு ரவுண்ட் வந்த பிரபல நடிகை திடீர் மரணம்! யார் தெரியுமா?

பழம் பெரும் மலையாள நடிகையான ஜமீலா மாலிக் தனது 73வயது வயதில் இயற்கை எய்தினார்.


தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற பல திரைப்படங்களில் நடித்த பழம் பெரும் நடிகையான ஜமீலா மாலிக் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். 

1972-ல் திரையுலகுக்குள் நுழைந்த ஜமீலா தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். மேலும், ஜமீலா மாலிக் தமிழ் திரைப்படங்களான வெள்ளி ரதம், அதிசய ராகம், லட்சுமி, நதியை தேடி வந்த காதல் போன்ற பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதுமட்டுமின்றி இவர் , ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இதோடு தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் ஜமீலா நடித்துள்ளார்.

அனைத்து மொழி திரைப்படங்களில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஜமீலா. தனது வாழ்க்கையினை திரையுலகிற்கு அர்ப்பணித்தவர் என்று கூட கூறலாம். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக சில ஜமீலா தனது கடைசி காலத்தில் தனது சொந்த ஊரான கேரளாவில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில், நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஜமீலா திங்கள் இரவு உயிர்ழந்தார். ஜமீலா மறைவை ஒட்டி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வண்ணம் உள்ளனர் .