தண்ணீர் பிரச்னையை தமிழக அமைச்சர்கள் இன்னமும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. இப்படித்தான் தி.மு.க.வும் மின்வெட்டு பிரச்னையில் அசட்டை காட்டியது.
கலைஞருக்கு கரண்ட்! எடப்பாடிக்கு வாட்டர்! வேலுமணியின் வாய் கொழுப்பு!
மழை வந்து நீர் மின்சாரமும், காற்றடித்து காற்றாலை மின்சாரமும் வந்துவிட்டால் தமிழ்நாட்டில் மின்பிரச்னை தீர்ந்துவிடும் என்றுதான் கருணாநிதியும் ஆற்காடு வீராசாமியும் அமைதியாக வேடிக்கை பார்த்தார்கள். அதனால்தான் எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டு ஆட்சியைப் பறிகொடுத்தார்கள்.
அதே பாணியில் இப்போது நாடெங்கும் தண்ணீர் பஞ்சம் மிகக் கொடிய அளவுக்குப் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால், அரசோ அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. எதிர்க் கட்சிகள் வேண்டுமென்றே இந்தப் பிரச்னையை ஊதி பெரிதாக்குவதாக சொல்கிறார்கள். அதனால்தான் வேலுமணி, தண்ணீர் பிரச்னையே இல்லை என்று வாய்க் கொழுப்பாக பேசி வருகிறார்.
தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் சொன்னதையும் அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை. இதுவரை புத்துணர்வு முகாமில் இருந்த பன்னீர், இப்போது டெல்லி மீட்டிங் போய்விட்டார். யாரையும் சந்திக்காமல் ஒளிந்திருந்த எடப்பாடி, அப்பல்லோவுக்குப் போய்விட்டார்.
இந்த நிலையில் தண்ணீர் பஞ்சத்தை வைத்து போராட்டம் நடத்த தி.மு.க. முன்வந்துள்ளது. இதையும் வேலுமணி கிண்டல் செய்திருக்கிறாராம். கருணாநிதிக்கு மின்வெட்டு போன்று எடப்பாடிக்கு தண்ணீர் பஞ்சம் தோல்வி கொடுக்காமல் இருந்தால் சரிதான்.