கேப்டன் வீட்டு பக்கம் வந்துடாதீங்க! வைகோவை கையெடுத்து கும்பிட்ட பிரேமலதா!

விஜயகாந்த் உடல் நலம் குறித்து விசாரிக்க வீட்டுக்கு வருவதாக கூறிய வைகோவை தயவு செய்து வர வேண்டாம் என்று கூறியுள்ளார் பிரேமலதா.


அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியுள்ள விஜயகாந்தை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் நேரில் சந்தித்து உடல் நல குறித்து விசாரித்து வருகின்றனர். முதலில் திருநாவுக்கரசர் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று வந்தார்.

மறுநாள் ரஜினி விஜயகாந்த் வீட்டுக்கு சென்றதும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த நில மணி நேரங்களில் ஸ்டாலின் விஜயகாந்த் வீட்டுக்கு செல்ல தமிழக அரசியலில் புதிய திருப்பமே ஏற்பட்டது. விரைவில் தமிழிசை விஜயகாந்தை சந்திக்க உள்ளார்.

முன்னதாக மத்திய அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியுஸ் கோயலும் விஜயகாந்தை சந்தித்திருந்தார். இந்த நிலையில் மதுரையில் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

விஜயகாந்தை நீங்களும் சென்று சந்திப்பீர்களா என்று வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டும் என்பது தான் தனது முதல் விருப்பம் என்றார். மேலும் விஜயகாந்தை தானும் சந்திக்க விரும்பியதாக வைகோ கூறினார்.

விஜயகாந்தை சந்திக்க விரும்புவதாக சுதீஷை தொடர்பு கொண்டு கேட்டதாக வைகோ கூறினார். ஆனால் விஜயகாந்த் ஓய்வில் இருப்பதால் டிஸ்டர்ப் செய்ய வேண்டும் என்று வீட்டில் கூறுவதாக வைகோவுக்கு சுதீஷ் பதில் அளித்துள்ளார்.

அதாவது தன்னை வீட்டுக்கு வர வேண்டாம் என்று விஜயகாந்த் குடும்பத்தினர் கூறிவிட்டார்கள் என்பதை சூசகமாக வைகோ கூறினார். இது குறித்து விசாரித்த போது, வைகோ வர விரும்பவுது குறித்து பிரேமலதாவிடம் சுதீஷ் கூறியுள்ளார்.

அதற்கு அவருக்கு ஒரு கும்பிடு தயவு செய்து இந்த பக்கம் வந்துவிட வேண்டாம் என்று பிரேமலதா பதில் அளித்ததாக சொல்கிறார்கள். இதனைத் தான் சுதீஷ் சிறிது நாசூக்காக வைகோவிடம் கூறி வீட்டிற்கு வர விடாமல் செய்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து வைகோ – பிரேமலதா இடையே வார்த்தை போர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வைகோ கொடுத்த வாக்குறுதியை நம்பித்தான் பிரேமலதா மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தார். ஆனால் தோல்விக்கு காரணம் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தது தான் என்று மதிமுகவினர் சிலர் கூறியதே பிரேமலதாவின் எரிச்சலுக்கு காரணம் என்கிறார்கள்.