கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதாகி ஜாமினில் இருக்கும் நிர்மலா தேவி மீண்டும் மொட்டை கோலத்தில் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டு சென்றார்.
சிவப்பு நிற ஹெல்மெட்! தலையில் மொட்டை! இருக்கன்குடி மாரியம்மன் கோவில் நேர்த்திக் கடன்! வைரலாகும் நிர்மலா தேவி!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்த பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் இருக்கிறார். வழக்கு விசாரணைக்காக அவ்வப்போது விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு செல்கிறார்.
நிர்மலா தேவி ஒவ்வொரு முறை நீதிமன்றம் வரும்போது ஒவ்வொரு யுக்தியை பின்பற்றி வருகிறார். அவர் அப்படி வருவது ஒரு செய்தியாகவே சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதற்கு காரணம், இவரது நடை, உடை, பேச்சு, செய்கைகள். ஆரம்பத்தில், தலைநிறைய பூ, காட்டன் சேரி என வந்த நிர்மலாதேவி பின்னர் தலைமுடியை அவிழ்த்து விட்டு வந்தார். பின்னர் தலைமுடியை அவரே வெட்டி கீழே போடுவதும் என திகிலை தந்தார்.
ஒருமுறை தனக்கு சாமி வந்துவிட்டதாக கூறி விட்டு சென்றார். பின்னர் ஒரு நாள் தியானம் செய்தார். கடந்த முறை மொட்டை அடித்தக் கோலத்தில் விசாரணைக்கு வந்து விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று நீதிமன்றத்திற்கு வந்த நிர்மலாதேவி மீண்டும் மொட்டைக் கோலத்தில் டூவீலரில் வந்து சென்றார்.
வழக்கிலிருந்து சீக்கிரமாக விடுதலை ஆக வேண்டும் என்பதற்காக இப்படி 2-வது மொட்டை அடித்துள்ளதாக தெரிகிறது. மாரியம்மன் கோவிலில்தான் மொட்டை போட்டதாக சொல்லப்படுகிறது. வழக்கை விசாரித்த நீதிபதி அக்டோபர் 4-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தார்.