கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு. பொதுத்துறை நிறுவனங்கள் பல தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்ததோடு, சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர்.
சிறு தொழில் அழிப்பு, மக்கள் பணம் விரயம். மோடி அரசுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டம் வெற்றி பெறுமா?
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் சீர் குலைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால். லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்கள் அழிந்துள்ளன. மறு பக்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஏராளமான வரிச் சலுகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்குவது, அவர்களுக்கு வழங்கப்படும் மானியம் என மக்கள் வரிப் பணத்தை வாரி வழங்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால்.
நாட்டின் சமூக, பொருளாதார தளத்தில் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.இதற்கு காரணமான தாராளமயக் கொள்கைகளையும், குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற திட்டங்களையும் கைவிட வலியுறுத்தி இன்று நடைபெற்று வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன.
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக சுமார் 25 கோடி ஊழியர்கள் மற்றும் 10 தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன இந்த வேலை நிறுத்த போராட்டத்தில். மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும்,தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை மத்திய அரசு தன்னிச்சையாக திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும், அரசு ஊழியர்களுக்கு உத்தரவாதமாக உள்ள பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கக்கூடாது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து.
மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர் போராட்டக் குழுவினர். மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லின் ஊழியர்கள் 90,000 பேருக்கு மேல் விருப்ப ஓய்வு என்ற பெயரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும். பொதுத் துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்குவதால் அதன் ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளதாகவும்.
மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக பாஜக அரசின் செயல்பாடுகள் இருப்பதாகவும், தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக இல்லை என்று கூறி. நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளது. மேலும் ஜே.என்.யூ. உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் நடைபெறும் வன்முறைகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்த அமைப்பு. மத்திய அரசின் தரப்பில் சரியான தீர்வு கிடைக்காவிட்டால், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை நீட்டிக்கவும் தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இரும்பு, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF, UTUC உள்ளிட்ட ஊழியர் அமைப்புகளும் இதில் பங்கேற்றுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களை தன்னிச்சையாக வேலையை விட்டு நீக்கும் புதிய சட்டத்திற்கு கடந்த 2018 நவம்பர் மாதத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதன்படி நாடு முழுவதும் அமலில் இருந்த 44 தொழிலாளர் சட்டங்களை ஒன்றிணைத்து ஊதியம், தொழில் துறை உறவுகள், சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்புப் பணிச் சூழல் ஆகிய நான்கு சட்டங்களாக மாற்றப்பட்டது.
இந்த மசோதாவால் தொழிலாளர்களை எளிதாகப் பணிநீக்கம் செய்யப்படுவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்த காரணங்களை குறிப்பிடும் ஊழியர்கள். முதல்நிலை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச ஊதியத்தை 24,000 ரூபாயாக உயர்த்தப்படவேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை வங்கிகள் ஒன்றாக இணைக்கப்படுவதை எதிர்த்து அதன் ஊழியர்கள் நீண்ட காலமாகவே போராடி வருகின்றனர், இந்நிலையில் இந்த வங்கிகள் இணைப்பில் உள்ள 6 வங்கிகளின் ஊழியர்கள் அமைப்புகளும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் உள்ளிட்ட வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டாலும், ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இன்றைய தினத்தில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து பேசியுள்ள இந்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் தபன் சென், மத்திய அரசு அதன் 'தொழிலாளர்களுக்கு எதிராக' செயல்பட்டு வருவதாக கடுமையாக குற்றம்சாட்டினார்.
அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான வெங்கடாச்சலம், மக்கள் மற்றும் ஊழியர்களை பொய் சொல்லி ஏமாற்றுவதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளத்தாகவும், பண முதலாளிகளின் பிணாமி தான் இந்த அரசு" என்று கூறியுள்ளார்.
மணியன் கலியமூர்த்தி