வறுமை நிலை வாடகைத் தாய் வேஷம் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.
பிறருக்காக குழந்தை பெற்றுக் கொடுக்கும் வாடகைத் தாய்கள்! உலுக்கி எடுக்கும் இளம்பெண்களின் வாழ்க்கை கதை!
கணவருக்கு வேலையில்லாத காரணத்தால் வறுமையை சமாளிக்க வாடகை தாயாக மாறியதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் வாடகை தாய் மட்டும் வசிக்கும் விடுதியில் தங்கி இருக்கும் பெண் ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார்.
நல்ல வேளை, கை நிறைய சம்பளம் எனக் கூறி ஒருவர் தன்னை 17 வயதில் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் அவர் மதுவுக்கு அடிமையானவர் என்றும் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவது திருமணத்திற்கு பின்னர்தான் தெரிந்ததாகவும் கூறினார். மேலும் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்தியதாக 2 குழந்தைகளுக்கு தாயான நான் தற்போது வாடகை தாயாக மாறிவிட்டதாக வேதனையுடன் அந்த பெண் தெரிவித்தார்.
மகப்பேறு காலத்தில் மட்டும் விடுதியில் தங்கும் அந்த பெண்ணுக்கு உணவுகள், மாத்திரைகள் கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. சில பெண்கள் குழந்தை பிறந்த பின்னர் அந்த குழந்தை எப்படி இருக்கிறது என பார்க்க ஆசைப்படுவதாகவும், அப்படி பார்க்கும்போது குழந்தையை கொடுக்க மனமில்லாமல் அழுவதாகவும் கூறி அந்த பெண், இதன் காரணமாகவே தான் பெற்றெடுக்கும் குழந்தையை பார்க்க விரும்புவதில்லை என கூறுகிறார்.
இது குறித்து மற்றொரு பெண் கூறுகையில் பெண்கள் எங்கு வேலைக்கு சென்றாலும் தொல்லை இருக்கிறது. வறுமையை போக்க சிறுநீரகத்தை கூட விற்க முயற்சி செய்துள்ளேன். இதுபோல் வாடகை தாயாக இருப்பதால் குடும்பத்தின் கஷ்டத்தை ஓரளவு போக்க முடிகிறது என கூறினர். மேலும் வாடகை தாய் தேவை 400 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கும் அந்த பெண் தற்போது மத்திய அரசு வாடகை தாய் முறை தடை செய்ய முடிவு எடுத்து இருப்பது எங்களை போன்றோரை பாதிக்கும் என தெரிவித்தார்.
வணிக ரீதியான வாடகை தாய் முறை தடை செய்ய மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .