டெல்லி: இந்திய அளவில் நன்கொடை வழங்கும் தொழிலதிபர் பட்டியலில் தமிழக தொழிலதிபர் ஷிவ் நாடார் முன்னிலையில் உள்ளார்.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் அம்பானியை தூக்கி அடித்த பச்சைத் தமிழன் சிவநாடார்!எதில் தெரியுமா?
ஹெச்சிஎல் நிறுவனத்தின் அதிபரான ஷிவ நாடார், கல்வி மற்றும் சமூகம் சார்ந்த நன்கொடை வழங்குவதற்குப் பெயர் பெற்றவர். இந்நிலையில், 2019ம் ஆண்டில் அதிக அளவில் நன்கொடை வழங்கிய இந்திய தொழிலதிபர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில், ஷிவ நாடார் முதலிடத்தில் உள்ளார். அவரும், அவரது குடும்பத்தினரும் இதுவரை ரூ.826 கோடி மதிப்பிலான நன்கொடை வழங்கியுள்ளதாக, Edelgive Hurun India Philanthropy List 2019ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு அடுத்தப்படியாக விப்ரோ அதிபர் அசீம் பிரேம்ஜி ரூ.453 கோடியும், அம்பானி ரூ.402 கோடியும் நன்கொடைகள் வழங்கியுள்ளதாக, அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. இந்திய கம்பெனிகள் சட்டம் 2013ன் படி, இந்திய தொழில் நிறுவனங்கள் தங்களது லாபத்தில் 2 சதவீதத்தை, சமூக மேம்பாட்டுப் பணிகளில் கட்டாயம் செலவிட வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.