இந்து பண்டிகைகள் மூட நம்பிக்கையாம்! பக்ரீத், கிறிஸ்துமஸ், ஓணம் பண்டிகைகளுக்கெல்லாம் வாழ்த்து சொல்வர் ஸ்டாலின்!

இஸ்லாமியர்களின் ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாழ்த்து சொல்லும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வது இல்லை. ஏனென்றால், அது மூட நம்பிக்கையாம்.


அவர் கேரள மக்களின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லிய விவகாரம்தான் தமிழகத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியிருக்கிறது. ஆம், கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலின், ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்தது ஏன் என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இத்தனைக்கும் தி.மு.க.வில் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள்தான் என்று பெருமையுடன் கூறிவரும் ஸ்டாலின், இந்து பண்டிகைக்கு ஒரு மாதிரியாகவும், பிற மத பண்டிகைகளை ஒரு மாதிரியாகவும் கடைபிடிப்பது ஏன் என்று தி.மு.க. முக்கியப் புள்ளிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளாவுக்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. கேரளாவில் தி.மு.க.வுக்கு எந்த மதிப்பும், மரியாதையும் கிடையாது. அப்படியிருக்கும்போது, ஓணம் பண்டிகைக்காக ஸ்டாலின் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்று விமர்சனம் செய்கின்றனர்.