தமிழக பொதுப்பணித் துறையின் முக்கிய ஒப்பந்தங்கள் அனைத்தையும் எடுத்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட கட்டடங்கள் கட்டி வரும் பிஎஸ்கே குழுமம் வருமான வரித்துறை இடம் சிக்கியுள்ளது.
எடப்பாடிக்கு தலை! ஸ்டாலினுக்கு வால்! நாமக்கல் பி எஸ் கே கன்ஷ்ட்ரக்சன்ஸ் வருமான வரித்துறையிடம் சிக்கிய பின்னணி!
கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் வேலூர் காட்பாடியில் பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 13 கோடி ரூபாய் நோக்கத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது. இவ்வளவு கட்டுகட்டாக ரொக்கம் துரைமுருகன் தொடர்புடையவர்களுக்கு கிடைத்தது எப்படி என்று கடந்த 10 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. இதன் முடிவில்தான் பி எஸ் கே குழுமம் மூலமாக துரைமுருகனுக்கு பணம் சப்ளை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சிக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் பி எஸ் கே குழுமம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை நுழைந்தது. சென்னை மற்றும் நாமக்கல்லில் உள்ள சுமார் ஏழு இடங்களில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். முடிவில் டிஎஸ்கே குடும்பம் தொடர்புடைய இடங்களிலிருந்து 13 கோடி ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது மட்டுமல்லாமல் சட்டத்திற்கு விரோதமாக நடைபெற்ற கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிமாற்றம் தொடர்புடைய ஆவணங்களையும் வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. இதனால் பி எஸ் கே குடும்பத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஏனென்றால் ஆர்கே நகர் இடைத் தேர்தலின்போது விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்தபோது பி எஸ் கே குடும்பம் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித் துறை ஆய்வில் ஈடுபட்டது.
அந்தப் பிரச்சினைகள் இருந்தேன் நீண்ட இழுபறிக்குப் பிறகு தான் பிஎஸ்கே குழுமத்தால் மீள முடிந்தது. முதலமைச்சர் எடப்பாடியின் வசமிருக்கும் பொதுப்பணித்துறையின் ஒப்பந்ததாரராக இருக்கும் பிஎஸ்கே குடும்பத்திலேயே வருமான வரித்துறை சோதனை நடத்தியிருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால் ஆளும் கட்சியிடம் ஒப்பந்தத்தை பெற்றுவிட்டு எதிர்க்கட்சியான ஸ்டாலின் தரப்புக்கு பிஎஸ்கே குழுமம் பணம் சப்ளை செய்திருப்பதுதான் அதிர்வலை களுக்கு காரணம். அதாவது எடப்பாடிக்கு தலையும் ஸ்டாலினுக்கு வாழும் காட்டியுள்ளது பி எஸ் கே நிறுவனம்.