திருச்சி: ஓடும் பேருந்தில் 40 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்த 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பேருந்தில் 40 வயது பெண்மணியுடன் 21 வயது இளைஞன் தகாத செயல்! பிறகு அரங்கேறிய விபரீதம்!
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கோட்டாத்துரை சேர்ந்தவர் சுலோச்சனா (40 வயது). இவர் துறையூரில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் துணை மாநில வரி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அரசுப் பேருந்தில்தான் இவர் வேலைக்குச் சென்று வருவார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒருநாள் வழக்கம்போல அரசுப் பேருந்தில் பயணம் மேற்கொண்ட சுலோச்சனாவை, 21 வயது இளைஞர் ஒருவர் கூட்டத்தில் உரச ஆரம்பித்துள்ளார். கூட்டத்தில் எதுவும் செய்தால் இளைஞன் தப்பித்துவிடுவான் என்பதால், சுலோச்சனா அப்படியே அமைதி காத்துள்ளார்.
இதனை மேலும் அட்வான்டேஜாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், குஷியாகி, சுலோச்சனாவை இஷ்டம் போல கையை வைத்து சில்மிஷம் செய்துள்ளான். கோட்டாத்துர் வரும் வரை சுலோச்சனா அமைதியாக இருந்து பின்னர் கீழே இறங்கியுள்ளார்.
அப்போது, அந்த இளைஞரும் கீழே இறங்கியுள்ளார். அத்துடன் ஃபோனில் தனது நண்பர்களை வரவழைத்து, சுலோச்சனாவை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். ஆனால், திடீரென சுலோச்சனா வீட்டிற்குச் செல்லாமல், வழியில் உள்ள போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.
போலீசார் உடனே சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் பிரசாந்த் என்றும், கீழக்குன்னுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதற்கிடையே, அந்த இளைஞருடன் வந்த 2 பேர் தலைமறைவாகிவிட்டனர்.
அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரசு அதிகாரி என்று கூட பாராமல், கூட்டத்தில் சில்மிஷம் செய்த நபர், அடங்காத ஆசையால் தற்போது கம்பி எண்ணி வருகிறார்.