என்னது நான் ஆந்திர ஆளுநரா? சுஷ்மா ஸ்வராஜ் கடும் அதிர்ச்சி!

ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என தற்போது உறுதியாகியுள்ளது.


கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான பிரதமர் மோடியின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா சுவராஜ். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக சுஷ்மா கூறியிருந்தார்.

இதனால் அண்மையில் பதவியேற்ற மத்திய அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் இடம் பெவில்லை. இந்த நிலையில் இவரை ஆந்திர மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநராக நரசிம்மன் செயல்பட்டு வருகிறார்.

இனி நரசிம்மன் தெலுங்கானா மாநில ஆளுநராக மட்டும் செயல்படுவார். ஆந்திர ஆளுநராக சுஷ்மா சுவராஜ் விரைவில் பதவி ஏற்க உள்ளார். பிரதமர் மோடியை 2014ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தவர்களில் ஒருவர் சுஷ்மா சுவராஜ்.

அப்போது முதல் தற்போது வரை மோடிக்கு பக்கபலமாக இருந்து அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வும் உறுதுணையாக இருந்தார். இதற்கு நன்றிக்கடனாக சுஷ்மா சுவராஜை ஆந்திர மாநில ஆளுநராக மோடி பரிந்துரைத்த குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று உள்ளதாக கூறுகிறார்கள். இப்படி எல்லாம் செய்திகள் வெளியாகின.

ஆனால் தான் மரியாதை நிமித்தமாக துணை குடியரசுத் தலைவரை சந்தித்த காரணத்தினால் ஆந்திர ஆளுநராகிவிட முடியுமா? என்று சுஷ்மா ஸ்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். தான் ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் தவறு என்றும்அவர் விளக்கம் அளித்துள்ளார். அப்படி என்றால் இந்த தகவலை யார் வெளியிட்டது என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது.