கோவை: பெண்கள் உடை மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் சிக்கினார்.
குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு வர்றோம்..! எங்க உடம்பை வீடியோ எடுத்துட்டாங்க! கோவை பெட்ரோல் பங்க் பரபரப்பு!
கோவையில் உள்ள சாய்பாபா காலனியில் ரூட்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள், உடை மாற்றும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை யார் செய்தார்கள் என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் உள்ள சூழலில்,
இந்த பங்க்கில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் மணிகண்டன் என்பவர், தன்னை ரூட்ஸ் ஊழியர்கள் தாக்கியதாகக் கூறி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுபற்றி ஊடகத்தினரிடம் பேசிய மணிகண்டன், 'பங்க் ஊழியர்கள் சிலர் என்னை பெட்ரோல் திருடச் சொன்னார்கள். அதனை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, என்னை அடித்து உதைத்தனர்,' என்று கூறினார். ஆனால், போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை.
அதேசமயம், இதனை சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். மணிகண்டன், பெட்ரோல் திருடுவதை வாடிக்கையாகச் செய்ததால், அவரை பணிநீக்கம் செய்தோம். ஆனால், அதற்காக பழி தீர்க்கும் நோக்கில் பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை ரகசியமாக செல்ஃபோனில் படம்பிடித்து, வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்து கோபமடைந்த பங்க் ஊழியர்கள் அவரை தாக்கியுள்ளனர் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.