சுடிதார் முதல் நைட்டி, சும்மீஸ் வரை! விவகாரமான ஆடைகளுடன் வலம் வந்த இளம் பெண்கள்! அதிர வைக்கும் காரணம்!

பெங்களூரு: பாலியல் வன்முறையை கண்டித்து, இளம்பெண்கள் பெங்களூருவில் நடத்திய விநோத பேரணி நடத்தியுள்ளனர்.


உடையின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன், நாட்டில் நடக்கும் நிறைய பாலியல் குற்றங்களுக்கு, பெண்கள் அணியும் உடைதான் காரணமாக உள்ளதென்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில், உடையை காரணம் காட்டி, பாலியல் குற்றங்களை ஆதரிப்பதைக் கண்டித்து, பெங்களூருவில் இளம்பெண்கள் சிலர் விநோத பேரணி நடத்தியுள்ளனர்.  Blank Noise என்ற அமைப்பு, I Never Ask For It, எனும் தலைப்பில் பெங்களூரு எம்ஜி ரோடில் நடத்தப்பட்ட இந்த பேரணியில், இளம்பெண்கள் நவீன உடைகளை ஹேங்கரில் தொங்கவிட்டபடி, பாலியல் குற்றங்களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

உடை அணியும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது, உடையின் அடிப்படையில் ஒருவரை துன்புறுத்துவது ஏற்புடையதல்ல என்பதை உணர்த்தவே இந்த பேரணி நடத்தப்பட்டதாக, இதில் பங்கேற்ற இளம்பெண்கள் பலரும் குறிப்பிட்டனர். மேலும் உடல் முழுவதையும் மறைத்து சுடிதார் அணிந்திருந்த போதும் தனக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக ஒரு பெண் கூறி அந்த உடையை எடுத்து வந்துள்ளார்.

மேலும் பாரம்பரிய உடைகள் அணிந்தால் பாலியல் சீண்டல் நடக்காது என்று கூறுபவர்களுக்கு பதில் அளிக்கும் வகையிலும் சில பெண்கள் அந்த ஆடையை எடுத்து வந்தனர். வீட்டில் நைட்டி அணிந்திருந்தால் கூட பாலியல் சீண்டலில் இருந்து தப்பிக்க முடியவில்லை என்று அந்த உடையுடன் சில பெண்கள் வந்திருந்தனர்.