சென்னையில் குடிசைவாசிகளை வெளியேற்றுவதற்கு அரசு முடிவெடுத்துவிட்டால், எந்த அரசியல்வாதிகளும் அதில் தலையிட மாட்டார்கள்.
குடிசைவாசிகளுக்குப் போராடும் திருமாவளவன்..! குடிசை இடிப்பை தடுக்க முடியுமா?
தி.மு.க. ஆட்சியிலும், அ.தி.மு.க. ஆட்சியிலும் அதுதான் நடக்கும். சமீபத்தில் கூவம் நதிக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நேரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கைவிட்ட நேரத்தில் திருமாவளவன்தான் அவர்களுக்குத் துணையாக நின்றார். உடனடியாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்புகொண்டு இடிப்பை தடுத்து நிறுத்தினார்.
ஆனால், இந்த இடிப்பை முழுமையாக தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான் நிலைமை. இந்த நிலையில் ஞாயிறு மாலை தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் குடிசை இடிப்பு குறித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் ஆண்டாண்டு காலமாகக் கூவம் நதிக்கரையிலும் இன்னும் பல இடங்களிலும் குடியிருந்து வரும் மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்கள் எங்கு வசிக்கிறார்களோ அதே இடத்திலேயே அந்த மக்களுக்கு வீடுகளைக் கட்டித்தர வேண்டுமென இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது.
மற்றபடி வழக்கம்போல், மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைச் திரும்பப்பெற வேண்டுமென இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது என்றும்
மத்திய அரசின் அச்சுறுத்தலுக்குப் பணிந்து தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்.பி.ஆர்) பணிகளை மேற்கொள்ள வேண்டாமெனத் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.