தஞ்சை மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் தம்பதி பரிதாபமான உயிரிழந்தனர்.
2 பெண்களுடன் பைக்கில் ட்ரிபிள்ஸ்..! வளைவில் படுவேகத்தில் திரும்பிய பஸ்! நொடியில் நேர்ந்த விபத்து! பறிபோன உயிர்கள்! கும்பகோணம் பரிதாபம்!
கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூரில் சங்கர், சித்ரா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு அரவிந்த், மணிகண்டன் ஆகிய 2 மகன்களும், அகிலா என்ற மகளும் உள்ளனர். சங்கர் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் கணவன், மனைவி மற்றும் உறவுப் பெண் சசிகலா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திருவிடைமருதூர் சென்று கொண்டிருந்தனர். அதே சமயம் சேலத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி ஒரு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது இந்த இரண்டு வாகனங்களும் கோவிந்தபுரம் பகுதியில் வந்தபோது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி சித்ரா, உறவினர் சசிகலா ஆகியோர் படுகாயமுற்று கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் சித்ராவின் உடல் மோசமடைய அவர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். சசிகலாவுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த திருவிடைமருதூர் போலீசார், சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.