17 வருடமாக சம்பளம் இல்லை..! அலுவலகத்தில் ட்யூப் லைட் கூட கிடையாது..! வீதிக்கு வந்த பிரபல டிவியின் ஊழியர்கள்!

17 வருடங்களாக தமிழன் டிவி செய்தியாளர்கள் சம்பளம் இல்லாமல் வேலை பார்ப்பதாகவும் அலுவலகத்தில் ட்யூப் லைட் கூட இல்லை என்றும் கூறி அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் போராடி வருகின்றனர்.


இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியிட்டுள்ள கோரிக்கைகள் பின்வருமாறு: 

1 . அணைத்து ஊழியர்களையும் மரியாதையாக நடத்த வேண்டுகிறோம்.

2 .குறைந்த சம்பளமாவது 18000 ரூபாய் வழங்க வேண்டுகிறோம்.

3 ஊழியர்களுக்கு கொடுக்கும் ஊதியத்தில் பாதி தொகையாவது போனசாக அணைத்து ஊழியர்களுக்கும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம் (வருகிற தீபாவளி உட்பட இக்கோரிக்கை )

4 .காலை மதியம் வேலைகளை shift based time வேலைகளை பகிர்ந்து அளிக்கும்படி அணைத்து ஊழியர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

5 .தமிழன் தொலைக்காட்சியின் தமிழ் நாடு முழுவதும் செய்தியாளர்களின் கோரிக்கையாக உள்ள ( இடையில் நிறுத்தப்பட்ட காலை மற்றும் மதியம் செய்திகளை இனி தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய அணைத்து ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

6 .அலுவலகத்தின் பின்பு பலநாட்களாக மின்விளக்கு கிடையாது மின் விளக்கு போடும்படி அணைத்து ஊழியர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

7 .பல வருடங்களாக தமிழன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த ஊழியர்களை மன உளைச்சளுக்கு ஆளாக்கி அவர்களை வேலையை விட்டு அனுப்பியவர்களுக்கு சரியான சன்மானத்தையும் அளித்து அவரது குடும்பங்களுக்கு உதவும் படி அணைத்து ஊழியர்களுக்கு கேட்டுக்கொள்கிறோம்.

8 .தமிழன் தொலைக்காட்சியின் தமிழ் நாடு முழுவதும் உள்ள செய்தியாளர்களுக்கு 17 வருட காலமாக சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருகிறார்கள் அவர்களுக்கு தகுந்த சம்பளம் வேண்டும் என்று அணைத்து செய்தியாளர்களின் வேண்டுகோளாகவும் கோரிக்கையாகவும் இருக்கிறது.