வெளிநாட்டில் உணவகம் ஒன்றில் தங்கி பணியாற்றி தன்னுடைய குடும்பத்தை கவனித்து வந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரின் உறவுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிவேகம்! லாரியை முந்த முயற்சி! திடீர் தடுமாற்றம்! டயருக்குள் சிக்கிய இளைஞன்! நொடியில் நிகழ்ந்த விபரீதம்!
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்த 22 வயதே ஆன ஜீனிஸ் வெளிநாட்டில் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் விடுமுறை தினத்தை உறவுகளோடு கழிக்க தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் தக்கலை அருகே நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது லாரி ஒன்றை முந்திச்செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அவர் ஓட்டிய இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் முந்திச் செல்ல முயற்சித்த லாரியின் பக்கவாட்டு சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜீனிஸ் படுகாயம் அடைந்ததாக கருதிய அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிய போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர் தலைக்கவசம் அணியாமல் சென்றதும் உயிரிழப்புக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.
தன்னுடைய குடும்பத்தின் எதிர்காலத்தை கருதி ஜீனிஸ் கவனத்தோடு வாகனம் ஓட்டியிருந்தால் அந்த குடும்பம் இன்று வறுமைக் கோட்டிற்கு தள்ளப்பட்டிருக்காது.