விக்கிற பாண்டியா! வாங்கிறவாண்டியா? அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அடுத்த காமெடி! என்ஜாய் தமிழா!

இடைதேர்தல் நடக்கப் போகும் தொகுதிப் பெயர்கூடத் தெரியாத மந்திரி! அதிமுக அதிர்ச்சி!


நாங்குநேரி,விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு தமிழ்நாட்டையே சுறுசுறுப்பாக்கி விட்டது.தினகரனும்,கமலும் ஆட்டத்தில் இல்லை என்று அறிவித்து விட்டார்கள்.திமுகவும் காங்கிரசும் ஆளுக்கு ஒன்று என்று பிரித்துக் கொண்ட்டுவிட்டார்கள்.அதிமுகவில் மட்டுமே சிக்கல்.அவர்களுடன் கூட்டணி இருப்பதாக கூறும் பிஜேபி நாங்குநேரி தொகுதியை குறிவைத்து காய் நகர்த்துகிறது.

ஆனாலும் எதிர்த்து நிற்பது காங்கிரஸ் தானே என்கிற தைரியத்தில் நாங்குநேரி தொகுதியில் நிற்கத்தான் அதிமுகவில் அடிதடி நடக்கிறது. நேற்று அஷ்டமியாக இருந்தும் நாங்குநேரி தொகுதியில் நிற்க 18 விருப்ப மனுக்கள் வந்திருக்கின்றன்.விக்கிரவாண்டி தொகுதிக்கு இதுவரை 9 பேர் மட்டுமே விருப்ப மனுச் செய்திருக்கிறார்கள்.

இதற்கிடையே,இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்து விட்டதாக ஒரு வதந்தியும்,அதெல்லாம் பிஜேபியை தவிர்க்க தங்கள் தலைமை செய்யும் ராஜதந்திர மூவ் என்றும் இரண்டு வதந்திகள் அதிமுக தலைமைக் கழகத்துக்கு உள்ளேயே உலவுகின்றன.இதில் எதைப் பற்றியும் கவலையே படாமல் ஒரு புதுக்காமெடி செய்திருக்கிறார் ஒரு அதிமுக அமைச்சர்.நேற்று ஒட்டஞ்சத்திரம் நகரில் அண்ணா பிறந்தநாள் விழா நடந்தது.

இந்தக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.அதில்' தற்போது இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த வேலூர் தொகுதியில் செற்ப வாக்கு வித்தியாசத்தில் நெருங்கி வந்த வெற்றியை இழந்தது போல இல்லாமல் இந்த முறை இரண்டு தொகுதிகளையும் கைப்பற்ற அதிமுக தொண்டர்கள் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும்' என்று பேசினார்.

அடுத்து அந்த தொகுதிகளைப் பற்றிப் பேசும்போதுதான் அமைச்சரின் நாக்கில் சனி விளையாடி விட்டது.நாங்குநேரி தொகுதியின் பெயரை சுலபமாகச் சொல்லிவிட்ட அமைச்சருக்கு விக்கிரவாண்டி வாயில் நுழையவில்லை,பின்னால் அமர்ந்திருந்தவர்களை பார்த்து ' விக்கற பாண்டியா,வாங்கற பாண்டியா? என்னையா பெயர் இது , வாயில்யே நுழைய மாட்டங்குது' என்று உளறிக்கொட்டி விட்டார்.

முதல்வருக்காவது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் தான் வாயில் நுழையவில்லை,திண்டுக்கல் சீனிவாசன் சென்னை போகும்போதெல்லாம் தாண்டிப்போகும் விக்கிரவாண்டி பெயர் வாயில் நுழையவில்லையா என்று இந்நேரம் அந்தத் தொகுதி மக்கள் காண்டாகி இருப்பது உறுதி.