டெல்லி: சப்னா சவுத்ரியின் புதிய நடன வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நடுரோட்டில் பாடகி சப்னா போட்ட செம குத்து டான்ஸ்! மீண்டும் வைரல்!
ஹரியானா பாடகி மற்றும் நடனக் கலைஞரான சப்னா சவுத்ரி, பாப் பாடல்களைப் பாடும் பிரிட்னி ஸ்பியர்ஸ், மடோனாவைப் போல, கவர்ச்சியான பாடல்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். இதன்படி, து ஜிஜ் லஜாவாப் என்ற பெயரில் புதிய நடன வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
செப்டம்பர், 2018 அன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ, இதுவரையிலும், யூ டியூப்பில், 30 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ மீண்டுமாக வைரலாக தொடங்கியுள்ளது.
பச்சை நிற சல்வார் கமீஸில் சப்னா சவுத்ரி மேடையில் கிளுகிளுப்பாக ஆட, ஆயிரக்கணக்கான கூட்டத்தினர் வாயை பிளந்து வேடிக்கை பார்க்கும், இந்த பாடல் வீடியோவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை தற்போது விறு விறுவென உயர்ந்து வருகிறதாம்.
விரைவிலேயே இந்த வீடியோ யூ டியூப்பில் புதிய சாதனை படைக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, தேரி ஆகாயா கா யோ காஜல் என்ற பெயரில் சப்னா சவுத்ரி வெளியிட்ட வீடியோ, பல ஆண்டுகளாக, யூ டியூப்பில் ஹிட் அடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=HaYa58i0eOQ#action=share