விஜய் டிவியின் மூலம் தமிழ் ரசிகர்களை பிரபலமானவர்களில் தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினியும் ஒருவர்.
15 வருசத்துக்கு முன்னாடி நம்ம டிடி எப்படி இருக்காங்க பாருங்க! வைரலாகும் புகைப்படம்!
விஜய் தொலைக்காட்சியில் பல தொகுப்பாளினிகள் இருந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த 20 வருடமாக தொகுப்பாளினி பணியை செய்து வரும் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் 20 ஆண்டுகால தொகுப்பாளினி பணியை பாராட்டி விழாவும் கொண்டாடப்பட்டது.
சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னரே இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்நிலையில் சியாம் மற்றும் ஆர்யா ஆகியோர் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த படம் உள்ளம் கேட்குமே.
இந்த படத்தில் நம்ம திவ்யதர்ஷினியும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அவரது புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் மிகவும் சப்பியாக டிடி உள்ளார்.
பார்பபதற்கு அடையாளமே தெரியாமல் வேறு ஒரு நடிகையைப் போல் உள்ளார் டிடி. இந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிர்கள் தங்கள் ஆச்சரியத்தை பகிர்ந்து வருகிறார்கள்.