லம்பாகினி காரில் ரஜினிகாந்த் தானே டிரைவ் செய்து போகிறார் என்று செளந்தர்யா ஒரு படம் எடுத்துப் போட, அது வைரலானது மட்டுமின்றி பல்வேறு வில்லங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி போட்டோ வைரலானது மட்டுமின்றி பல்வேறு வில்லங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது! யாருங்க அவசரம் அவசாமா இ.பாஸ் கொடுத்தது..?
ஏனென்றால், இந்த சிஸ்டமே சரியில்லை என்று சொல்லிய ரஜினி, இ.பாஸ் பெறாமல் கிளம்பியதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் வைரலானதும் அவசரம் அவசரமாக இ.பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது 23ம் தேதிய இ.பாஸ்.
20ம் தேதி ரஜினி மேற்கொண்ட பயணத்திற்கு 23ம் தேதி இ.பாஸ் வழகியது எப்போது என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு சமூக வலைதளத்தில் எக்கச்சக்க வறுத்தல்கள். இதோ, அதில் ஒரு வில்லங்க கேள்வி.
இன்றைக்குள்ள இ-பாஸிற்கு நேற்று முன்தினமே பயணம் செய்கிறார். இந்த களவாணி தனத்தை கேள்வி கேட்டால், தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்று சொன்னாலும் சொல்வார். அவர்தான் ரஜினி.
மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவர், அங்கிருந்து பக்கத்து மாவட்டத்தில் உள்ள தனது வீட்டுக்கு மீண்டும் திரும்பிச் செல்ல, எத்தனை முறை விண்ணப்பித்தாலும் இ- பாஸ் கிடைப்பதில்லை. இதுபோன்ற சூழலில் வேறு வழியே இல்லாமல், இ-பாஸ் இன்றி வழக்கு பதிவு, கார் பறிமுதல் என தனது பராக்கிரமங்களை காட்டுகிறது அரசு.
ஆனால் இதே ஊரில், இதே காலகட்டத்தில் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும் ஊரடங்குச் சட்டம், கட்டுப்பாடு என எதுவுமே பொருந்தாது என்பதற்கு கண்முன்னே இப்போது மற்றொரு உதாரணம் நிகழ்ந்துள்ளது.
இதற்கு ரஜினி பேசுவாரா..?