இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் இன்று தொடங்கவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்ய முடியும்.
பாகிஸ்தானின் சூப்பரான சாதனையை சமன் செய்யுமா இந்தியா?
பாகிஸ்தானின்
சாதனை:
பாகிஸ்தான்
அணி தொடர்ந்து 11 T20 தொடர்களில் வெற்றி பெற்று உலக சாதனை செய்துள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததன் மூலம் இந்த சாதனைக்கு தென்னாபிரிக்கா அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்தியாவின்
தொடர் வெற்றி எவ்வளவு?
இந்திய
அணி இது வரை தொடர்ந்து 10 T20 தொடர்களில் வென்றுள்ளது. இன்று தொடங்கும் நியூஸிலாந்திற்கு எதிரான தொடரை வென்றால் இந்திய அணி11 T20 தொடர்களை
வென்று பாகிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்ய வாய்ப்பு உள்ளது.
நியூஸிலாந்தை
வெல்ல முடியுமா?
இந்தியாவை
பொறுத்த வரையில் கேப்டன் கோஹ்லி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் ஓய்வில் உள்ளனர். அதனால் ரோஹித் சர்மா கேப்டனாக இந்த தொடரில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோஹ்லி
மற்றும் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாததால் நியூஸிலாந்திற்கு எதிரான தொடர் இந்திய அணிக்கு சவாலாக தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பொறுத்திருந்து
தான் பார்க்கவேண்டும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியின் தொடர் சாதனையை சமன் செய்யுமா என்று.