இந்தோனேசியா நாட்டில் இதுவரை கண்டிராத அளவிற்கு மிகப்பெரிய பூ ஒன்று மலர்ந்து உலக சாதனை படைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மலரில் அழுகிய பிண வாடை..! காண்போரை மிரள வைக்கும் பிரமாண்டம்!
இந்தோனேசிய நாட்டின் சுமத்ரா தீவில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்றைய தினம் உலக அதிசயம் நேர்ந்துள்ளது. அதாவது உலகிலேயே மிகப்பெரிய பூ ஒன்று மலர்ந்துள்ளது. ரப்லேசியா அர்னால்டி என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த பூவனது சுமார் 4 அடி அகலம் கொண்டதாக இருக்கிறது. இது ஒட்டுண்ணி தாவர வகையை சேர்ந்தது என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பூவில் இருந்து அழுகிய மனித உடலின் வாடை வருகிறது. இதனால் பிணமலர் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் வாழ்நாள் வெறும் ஒருவாரம் மட்டுமே என அறிவியலாளர்கள் தெரிவித்ததால், பலர் பார்த்து ரசித்து வருகின்றனர்.
வாடை காரணமாக, பலர் தள்ளி நின்று பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.