இன்று காலை கண்ட ஒரு மின்னஞ்சல் மனதை நெகிழச் செய்கிறது. வெறுப்பின் இருள் நடுவே ஏற்றிய அன்பின் சுடர் அது. "11 கவிதைத் தொகுப்புகளுக்கும் வெறும் 1400 ரூபாதானா..
11 கவிதை தொகுப்புக்கு வெறும் 1400 ரூபாயா? ரூ.10 ஆயிரம் அனுப்பிய ரசிகர்! நெகிழும் மனுஷ்யபுத்திரன்!
இது ஒரு மனிதனின் உழைப்பைச் சுரண்டுவதாகும்" என பத்தாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார் அந்த நண்பர்.
ஒரு கணம் கூச்சத்தாலும் நெகிழ்ச்சியாலும் திகைத்துப்போனேன். இது பணம் சம்பந்தபட்டதல்ல. ஒரு படைப்பை விலை நிர்ணயிக்கமுடியாத உழைப்பாக காணும் உயரிய வாசக மனோபாவம் கொண்ட ஒருவரே இப்படி யோசிக்க முடியும். இது அறிவுசார் கலாச்சார சூழலில் விளைந்த மனதின் வெளிப்பாடு. மேலும் தயக்கத்துடன் கூடுதலாக " இருளில் நகரும் யானை" மட்டும் அனுப்ப முடியுமா என்று கேட்கிறார்.
ஒரு அசலான வாசகரின் உழைப்பை நானும் சுரண்ட விரும்பவில்லை. பத்தாயிரம் ரூபாய்க்கும் அவர் விரும்புகிற நூல்களை அனுப்ப ஆசைப்படுகிறேன்.
ஒவ்வொரு முறையும் புத்தகங்களுக்கு விலை நிர்ணயிக்கும்போதும் மிகவும் தடுமாற்றமாக இருக்கும். காகித விலை உயர்வு, அச்சுக்குகூலி உயர்வு என பல காரணங்களால் புத்தகங்களின் விலை அதிகரித்துவிட்டது. வாசகனின் மீதான இந்த சுமையை எப்படியாவது குறைக்க முடியாதா என நாங்கள் நினைக்காத நாள் இல்லை.
இந்த மின்னஞ்சல் ஒரு எழுத்தாளனாக எனக்குத் தரும் கெளரவ உணர்வு மிக ஆழமானது. அவர் அனுமதித்தால் அவர் பெயருடன் இந்த மின்னஞ்சலை வெளியிட விரும்புகிறேன்.
கண்காட்சிகளில் உயிர்மை அரங்கில் கையில் போதுமான அளவு பணம் இல்லாமல் சில புத்தகங்களுடன் தயங்கித் தயங்கி நின்ற வாசகர்களுக்கு பாதி விலைக்கும் குறைவாக கொடுக்கச் செய்திருக்கிறேன். சிலருக்கு உயிர்மையில் நானே புத்தகம் திருடி இலவசமாக கொடுத்திருக்கிறேன்.
இவர்களும் 1400 ரூபாய் புத்தகத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அனுப்பும் இந்த வாசகரும் ஒன்றுதான். உண்மையான வாசகன் சொல்லை விலையாக ஒருபோதும் காண்பதில்லை.எழுதுகோல் தெய்வம்இ ந்த எழுத்தும் தெய்வம்.