என் கணவருக்கு தினமும் ஒரு பெண் தேவைப்பட்டது..! தஞ்சை ஃபாரின் ரிட்டர்ன் கொலையில் மனைவி கொடுத்த வாக்குமூலம்!

தஞ்சை அருகே கணவனை கொல்லுவதற்காக மனைவி 15 லட்ச ரூபாய் பேரம் பேசி 2 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு கணவனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தினால் பெற்றோர்களை நம்பி இருந்த 8-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு படிக்கும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.


கடந்த கடந்த 25-ம் தேதி அன்று தஞ்சாவூரில் வல்லம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே காரில் சென்ற நபரை வழிமறித்து மர்ம கும்பல் ஒன்று கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்த விசாரணையில் நடந்த்து என்னவென்று கண்டு பிடித்துள்ளனர். அந்த விசாரணையில் கூலிப்படை மூலம் அந்த மனைவியே கணவனைக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை குறித்த காரணங்களை விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்துள்ளது. கொல்லப்பட்ட நபர் தான் ஜோசப். இவர் குவைத் நாட்டில் வேலை செய்து வருகின்றார். அப்போது தான் இலங்கை நாட்டைச் சேர்ந்த அசிலா என்கிற ரசியாவும் பணிபுரிந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கிறிஸ்துவ மதத்திலிருந்து ஜோசப் இஸ்லாமிய மதத்துக்கு மாறியதுடன் தனது பெயரை யூசுப் என்றும் மாற்றிக்கொண்டார். பின்னர் இருவரும் தஞ்சாவூர் வந்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு முழுமையாக தஞ்சையில் வசித்து வந்துள்ளனர். குவைத்தில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள காயிதே மில்லத் நகரில் அப்பார்ட்மென்ட் வீடுகள் மற்றும் சொத்துகள், விவசாயப் பண்ணை எனப் பலவற்றை யூசுப் பெயரிலேயே வாங்கியதுடன் அங்கேயே இவர்கள் வசிக்கத் தொடங்கினர். இதற்கிடையில் இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்தன. 

இப்படி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த யூசுப் மீண்டும் குவைத்தில் உள்ள ஷாப்பிங் காம்பளக்ஸ் ஒன்றில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். தஞ்சையிலேயே அசிலா குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கணவன் வெளிநாட்டில் வேலை பார்க்க மனைவி இங்க தனிமையில் இருக்கையில், யூசுப்புக்கும் அசிலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

பின்னர் சில காலங்களுக்கு பிறகு அசிலாவின் நடத்தையில் யூசுப்புக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், குவைத்திலிருந்து வந்த யூசுப் விளார் சாலையில் உள்ள தனியார் வங்கியின் லாக்கரில் சொத்துப் பத்திரம், பணம், நகை உள்ளிட்டவற்றை வைத்துவிட்டு மீண்டும் குவைத் சென்றுவிட்டார்.

இதனையடுத்து, அசிலா அந்தத் தனியார் வங்கியின் மேனேஜரை கையில் வைத்துக்கொண்டு யூசுப் அனுமதி இல்லாமல் லாக்கரில் உள்ள பணம், நகை உள்ளிட்டவற்றை உடைத்து எடுக்கிறார். குவைத்திலிருந்து வந்த யூசுப் வங்கிக்குச் சென்று பார்த்த பிறகு லாக்கரில் இருந்த எல்லாமும் எடுக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் வங்கி மேனேஜர் மற்றும் தன் மனைவி அசிலாவின் மேல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதில் அசிலா சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் வெளியே வருகிறார்.

மனைவி மீண்டும் விட்டிற்கு வந்த உடன் அவளை பிடிக்கவில்லை நீ ஒழுங்கானவள் கிடையாது என திட்டி குழந்தைகளுடன் அடித்து வீட்டைவிட்டு வெளியே துரத்திவிடுகிறார். கோபம் அடைந்த மனைவி திருச்சியைச் சேர்ந்த சகாயம் என்பவர் உதவியுடன் திருச்சியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து குடியேறுகிறார்.

தன் மனைவி இப்படி சென்றுவிட்டால் என்று எண்ணி கவலையில் யூசுப் பல்வேறு பெண்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு சொத்துகளையும் ஒவ்வொன்றாக விற்று தொடர்பில் இருக்கும் பெண்களுக்கு கொடுத்து வந்துள்ளார். இதனை அனைத்தும் திருச்சியில் இருந்தாலும் யூசுப்பின் ஒவ்வொரு நகர்வையும் அசிலா கவனித்து வந்தார்.

இதனை கண்ட அசிலா மிகவும் கோபத்திற்கு உள்ளாகி யூசுப்பைத் தீர்த்துக்கட்ட முடிவு எடுத்தார். முதல் முயற்சி தோல்வியில் முடிந்தை அடுத்து திருச்சியைச் சேர்ந்த கூலிப்படையினர் கும்பலை அறிமுகம் செய்கிறார். அவர்களிடம் யூசுப்பை கொலை செய்ய 15 லட்ச ரூபாய் பேரம் பேசி 2 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. யூசுப் கதையை முடித்த பிறகு, பாக்கி பணத்தைத் தருவதாகப் பேசி முடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தான் கடந்த 25-ம் தேதி அன்று தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் என்ற இடத்தின் மேம்பாலத்தில் கார் மூலம் யூசுப் சென்று கொண்டிருந்தபோது திருச்சியிலிருந்து இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் யூசுப்பை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொன்றுவிட்டு கல்லணை வழியாகத் திருச்சிக்கு தப்பியோடிவிட்டனர்.

இதனையடுத்து தான் காவல்துறையினர் விசாரணையில் இவை அனைத்தும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தை பார்க்கும் போது ஒரு குடும்பத்தில் ஒரு பெண் சரியில்லை என்றால் அந்த குடும்பமே இப்படி ஆனாதையாக தான் இருக்க வேண்டும் என்ற சம்பவத்திற்கு இந்த குடும்பம் ஒரு எடுத்துக்காட்டாக அமைக்கிறது. பெற்றோர்களின் செய்த தவறின் காரணமாக 8-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு படிக்கும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.