15 வயது மாணவிக்கு ஆபாச படம்! கட்டாய பாலியல் வல்லுறவு! ஆட்டோ டிரைவர்களின் விபரீத செயல்!

15 வயதுச் சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த இருவரில் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


இது தொடர்பான புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உதவியுடன் போலீசார் குற்றவாளிகள் இருவரின் வரைபடங்களை தயாரித்தனர். அவற்றை போலீஸ் இன்ஃபார்மர்களிடம் கொடுத்து தேடச் செய்ததில் அவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவனான ஒரு ஆட்டோ டிரைவர் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்குச் சென்றது தெரியவந்தது. ஆனால் அவன் வீட்டுக்கும் செல்லாமல் தனது ஆட்டோவிலேயே சுற்றி வந்ததும், ஆட்டோவிலேயே உறங்கியதும் தெரியவந்தது. 

இந்நிலையில் அவனை கண்டுபிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு குற்றவாளி பீஹார் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு தப்பிச் சென்ற நிலையில் அவனை போலீசார் தேடி வருகின்றனர். மாணவியை பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்துச் செல்லும் இருவரும் அவருக்கு ஆபாச படங்களை காட்டி தனிமைக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.