17 மாத குழந்தை வாயில் துப்பாக்கிச் சூடு! வலியை பொருட்படுத்தாமல் குழந்தை செய்த செயல்! நெகிழ வைத்த சம்பவம்!

துப்பாக்கியால் சுட்டு குண்டடிபட்ட குழந்தை விளையாடி வரும் சம்பவம் அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. சனிக்கிழமையன்று இங்கு மனிதநேயமற்ற தாக்குதல் நிகழ்ந்தது. டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள அஞ்சலகத்திலிருந்த வாகனத்தை ஒருவன் கடத்தி வந்துள்ளான். தப்பிப்பதற்காக தன் கண்ணில் பட்ட அனைவரையும் சரமாரியாக சுட்டு தள்ளியுள்ளான்.

இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மிகவும் துயரமான செய்தி என்னவென்றால் இந்த தாக்குதலில் 17 மாத குழந்தை காயமடைந்துள்ளது தான். அந்தக குழந்தையின் பெயர் ஆண்டர்சன் டேவிஸ். 

குழந்தையின் முகத்தில் பட்ட அந்த குண்டு வாய், மூக்கு, முன்வரிசை பற்கள், நாக்கு ஆகியவற்றை சேதப்படுத்தியது. மேலும் உலோகத் துண்டு ஒன்று குழந்தையின் இதயத்தில் சிக்கிக்கொண்டது. அந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்ற முடிவெடுத்தனர். இன்று அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது. டெக்சாஸ்a மாகாணத்தின் ஆளுநரான கிரேக் அப்பாட் கூறுகையில், "குழந்தையின் தாயார் எனக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.

அது குழந்தை ஆண்டர்சன் தற்போதும் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் ஆடிப்பாடி விளையாடி வருகிறான்" என்று வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவமானது அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.