கல்லூரி மாணவியை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவமானது திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 வயதில் மகன்! 19 வயது மாணவியை மணந்த 44 வயது பைனான்சியர்! பிறகு நேர்ந்த பரிதாபம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் புல்லரம்பாக்கம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு சிவமணி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய வயது 44. இவர் அப்பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பல ஆண்டுகள் முன்னர் திருமணமாகி தற்போது 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.
அதே பகுதியில் தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வரும் சினேகா என்ற பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி காதலிக்க தொடங்கினார். பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் சினேகா காணாமல் போயுள்ளார். உடனடியாக சினேகாவின் பெற்றோர் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரித்ததில் சினேகாவுக்கும், சிவமணிக்கும் இடையேயிருந்த தொடர்பு தெரியவந்துள்ளது.
உடனடியாக காவல்துறையினர் இருவரையும் தேட தொடங்கினர். அப்போது அவர்கள் திருமணம் செய்து கொண்டு வேளாங்கன்னியில் வாழ்ந்து வருவதை கண்டுபிடித்தனர். உடனடியாக காவல்துறையினர் விரைந்து சென்று இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.