திமுக தலைவர் ஸ்டாலினுடன் இளைய தளபதி விஜய் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே இடத்தில் 2 தளபதிகள்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு! நடந்தது என்ன??
அரசியல் வட்டாரங்களில் தளபதி என்றால் திமுக தலைவர் ஸ்டாலின் என்று பொருள். அதேபோன்று சினிமா வட்டாரங்களில் தளபதி என்றால் விஜய் என்றே பொருள். இதனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு சர்ச்சைகளும் ஏற்பட்டன.
தற்போது இவ்விருவரும் சந்தித்துள்ளனர்.முரசொலி நாளிதழின் ஆசிரியர் செல்வம். இவர் கலைஞரின் மூத்த மகளான செல்வியின் கணவராவார். மேலும் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய தூண்களில் ஒருவரான முரசொலி மாறனின் தம்பியும் ஆவார்.
முரசொலி செல்வம் மற்றும் செல்வி தம்பதியினரின் பேத்தியின் நிச்சயதார்த்த விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு முரசொலி செல்வம் நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுத்திருந்தார். அதேபோன்று நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் 2 தளபதிகளும் பரஸ்பர உரையாடல்களை மேற்கொள்வது போன்று அமைந்துள்ளது. திமுகவின் பொருளாளர் துரைமுருகனும், கலைஞரின் நீண்டகால குடும்ப நண்பரும் கவிப்பேரரசுருமான வைரமுத்துவும், வடசென்னை மாவட்ட செயலாளரான சேகர்பாபுவும் உடனுள்ளனர்.
இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் ட்ரண்டிங்காக தொடங்கியுள்ளது. 2 தளபதிகளும் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கிலியை கிளப்பும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.