இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவமானது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்சரில் பயங்கர வேகம்! விதிகளை மீறி ஓவர் டேக்!சல்லி சல்லியான 2 பேர்! தூத்துக்குடி பரிதாபம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் சாந்தி நகர் எனும் இடம் அமைந்துள்ளது. இவ்விடத்தை சேர்ந்த மணிசங்கர், அஜித் மற்றும் அவர்களுடைய 4 நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் குலசேகரப்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அங்கு நடைபெறும் தசரா திருவிழாவில் மாலை அணிவிப்பதற்காக அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். இருசக்கர வாகனத்தை மணிசங்கர் ஓட்டி சென்றுள்ளார்.
ஆறுமுகநேரி பகுதிக்கு அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, முன்னே சென்ற ஆம்னி பஸ்ஸை முந்தி செல்ல முயன்றுள்ளார். இருவழி சாலையில் சென்று கொண்டிருந்ததால் எதிர்ப்புறத்தில் வந்த மினிலாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. பயங்கரமான விபத்தில் சம்பவ இடத்திலேயே மணிசங்கர் உயிரிழந்தார்.
பின்னால் அமர்ந்து சென்ற அஜித் படுகாயம் அடைந்ததால் திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி இருந்தால் இதுபோன்ற விபத்துக்களை தவிர்த்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த சம்பவமானது தூத்துக்குடி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.