கிறிஸ்டியன் கான்வென்ட்..! நள்ளிரவு..! ஆழமான கிணறு..! சடலமாக மிதந்த இளம் கன்னியாஸ்திரி..! மாநிலத்தையே பதற வைக்கும் சம்பவம்!

21 வயது கன்னியாஸ்திரி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவமானது கேரளா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா என்கிற மாவட்டம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட திருவுல்லா என்ற பகுதியில் ஒரு கான்வென்ட் பள்ளி இயங்கி வந்துள்ளது. இப்பள்ளியில் 21 வயது மதிக்கத்தக்க கன்னியாஸ்திரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் அப்பள்ளியில் கிட்டத்தட்ட ஓராண்டு பணியாற்றி வந்துள்ளார்.

இதற்கிடையே யாரும் எதிர்பாராத வகையில் இவர் அப்பள்ளியிலுள்ள கிணற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உடன் காவல்துறையினர் தீயணைப்பு படை வீரர்களுடன் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.

உடனடியாக கன்னியாஸ்திரியின் உடலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கன்னியாஸ்திரி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு விசாரணையை சரியான பாதையில் எடுத்துச் செல்ல இயலும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.