இலங்கை இன அழிப்பு போரினால்,வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட தமிழ் மக்களுக்கு புது வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்வுக்கு செல்ல கூடாதென நடிகர் ரஜினிகாந்த் க்கு எதிராக பொங்கிய தமிழ்ப்போராளிகள் நிஜ இன உணர்வுடன்தான் பொங்கினார்களா என சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜபக்சேவுடன் ஒப்பந்தம்! ரூ.25 ஆயிரம் கோடி இலங்கையில் முதலீடு! ஜெகத்ரட்சகனுக்கு ஒரு நீதி ரஜினிக்கு ஒரு நீதியா? கொதிக்கும் சசிகலா புஷ்பா!
இது தொடர்பாக சசிகலா புஷ்பா வெளியிட்டுள்ள பதிவில், ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேயுடன் கைகுலுக்கி,ஒப்பந்தம் போட்டு இலங்கையில் 25,000 கோடி ரூபாய்களை வணிக வருவாய் நோக்கத்துடன் கொட்டியுள்ள ஜெகத்ரட்சகன் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா போராளிகளே?
ஈழப்படுகொலைக்கு ஆணிவேராக நின்ற ப.சிதம்பரம்,இலங்கையில் ஆடம்பர மாளிகை கட்டியுள்ளாரே.இந்த இருவரின் செயல்களை நீங்கள் எதிர்க்காமல் வாய்மூடி மௌனிகளாக ஏற்றுக்கொண்டதால் தமிழ்ப்போராளிகள் அல்ல தமிழ்ப்போலிகள்..
மக்கள் மத்தியில் கூடுதல் செல்வாக்கு பெற்றிடுவாரே என்ற வயிற்றெரிச்சலில் ரஜினிக்கு எதிராக அன்று முழங்கிய சீமான்,இந்த இருவரின் செயல்களுக்கு எதிராக சீறாததின் மர்மம் என்னவோ?
வைத்தால் பிள்ளையார்,வழித்து எறிந்தால் சாணி பழமொழிக்கேற்ப உங்கள் செயல்பாடுகள் இருப்பதால்,தமிழ்கூறும் நல்லுலகம் இனி உங்களை தமிழ்ப்போலிகள் என்றே அழைக்கும். இவ்வாறு சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.