குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் 271 இளம் பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்து வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை இல்லாமல் தவித்த 271 பெண்கள்..! திருமணம் செய்து வைத்து நெகிழ வைத்த தொழில் அதிபர்! நெஞ்சை உலுக்கும் காரணம்!
குஜராத் மாநிலத்தில் சூரத் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு மஹேஷ் சவானி என்ற வைர வியாபாரி வசித்து வருகிறார். இவர்தான் இன்று சூரத்தில் 271 இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறார். அவர்களுள் 5 பேர் இஸ்லாமியர்கள் என்றும், ஒருவர் நேபாளத்தை சேர்ந்தவர் என்றும், 5 பெயர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்றும், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 2 பேர் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் மகேஷ் சவானி இவ்வாறு செய்கிறார் என்பதற்கு ஒரு குட்டிக்கதை பின்னணி உள்ளது. அதாவது 2008-ஆம் ஆண்டில், இவருடைய தூரத்து உறவினர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக நிதி திரட்டி வந்துள்ளார். ஆனால் அது திருமணம் குறித்த நாளில் நடைபெறாமல் போனவுடன் அந்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையறிந்து மன உளைச்சலுக்காளான மகேஷ் இந்த பெண்ணுக்கு தன்னுடைய செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார். அதன்பிறகு 2012-ஆம் ஆண்டு முதல் சூரத் நகரில் சித்தி வரும் தந்தையை இழந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
தற்போது வரை மகேஷ் 3,172 இளம் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.