திருமணமான பெண் கல்லூரி மாணவருடன் ஓடிய சம்பவமானது பொன்னமராவதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முறையற்ற உறவு! 20 வயது கல்லூரி மாணவனுடன் 35 வயது திருமணமான பெண் ஓட்டம்! பட்டுக்கோட்டை பரபரப்பு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி எனும் இடம் அமைந்துள்ளது. பொன்னமராவதிக்கு உட்பட்ட பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகனின் பெயர் மணிகண்ட பிரபு. இவருடைய வயது 20. அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படிப்பில் இறுதியாண்டு பயின்று வருகிறார்.
மலேசியாவில் பிரியா என்ற 35 வயது பெண் வசித்து வருகிறார். இவ்விருவருக்கும் ஃபேஸ்புக் மூலம் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாற, ஃபேஸ்புக் மூலம் தங்கள் காதலை வளர்த்துக்கொண்டனர். தன்னைவிட 15 வயது சிறியவர் என்பதை அறிந்தும் பிரியா மணிகண்டபிரபு மீது அளவுகடந்த ஆசை கொண்டிருந்தார்.
இந்த முறைகேடான காதல் மணிகண்ட பிரபுவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. நேரடியாக மணிகண்டபிரபுவை வன்மையாக கண்டித்தனர். இருப்பினும் அந்த பெண்ணிடம் உள்ள தொடர்பை அவர் நிறுத்தி கொள்ளவில்லை.
இருவரும் நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்க்க எண்ணினர். தன்னுடைய உறவினர்களை தஞ்சை மாவட்டத்தில் சந்தித்து வருவதாக கூறி விட்டு பிரியா மலேசியாவிலிருந்து பொன்னமராவதி வந்துள்ளார்.
நேற்றிரவு மணிகண்ட பிரபு தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீட்டிற்கு வரவே இல்லை. அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். ஆனாலும் எந்த பயனும் இல்லை. இதனிடையே மணிகண்ட பிரபுவின் தாயார், பொன்னமராவதி காவல் நிலையத்தில் தன் மகனை காணவில்லையென்றும், பிரியா தன்னுடைய மகனை கடத்தி சென்றுவிட்டதாகவும் புகாரளித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இருவரும் வெளியூருக்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது பொன்னமராவதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.