மும்பை: நண்பரின் குழந்தையை மாடியில் இருந்து வீசிக் கொன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரட்டையர்களை கொன்றால் எல்லாம் கிடைக்கும்! சைக்கோ கொலையாளியின் மிரள வைக்கும் டைரி குறிப்பு!
மும்பையின் கொலாபா பகுதியை சேர்ந்த அனில் சாகுனி (43 வயது), என்ற நபர், தனது நண்பர் ஒருவரின் 3 வயது பெண் குழந்தையை திடீரென 7வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொன்றார். இதன்பேரில், அந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம், முதலில் சில இயற்கை சக்திகளின் வலியுறுத்தலால் இதனைச் செய்ததாக, அனில் சாகுனி கூறினாலும், அந்த நபரின் வீட்டில் இருந்து டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், நண்பர் ஒருவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளதால், அவர்களில் ஒருவரை கொன்றால் தனது வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீரும் என்ற நம்பிக்கையில் அனில் சாகுனி இருந்ததாகக் கூறியிருக்கிறார்.
குறிப்பாக, பெண்கள் பற்றி பலவிதமான ஆய்வுகள், தீர்மானங்களை அந்த டைரியில் எழுதி வைத்துள்ள அனில், குறிப்பிட்ட இரட்டை குழந்தைகளில் ஒருவரைக் கொல்ல மாதக்கணக்கில் நீண்ட திட்டம் ஒன்றையும் வகுத்துள்ளார். அதன் அடிப்படையில்தான், தகுந்த நேரம் பார்த்து, இரட்டையர்களில் ஒரு குழந்தையை பிடித்து மாடியில் இருந்து தள்ளி கொன்றிருக்கிறார். இதனை தனது டைரியில் அனில் தெளிவாக எழுதி வைத்துள்ளார். இதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், அனில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபராக உள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.