தமிழகத்தில் ஆட்சி மாற்றம், மத்தியில் நாம் கை காட்டுபவர் ஆட்சி என்று தி.மு.க. மட்டும் கனவு காணவில்லை, அதற்கு மேலும் கனவு கண்டவர் தினகரன். ஆர்.கே.நகர் ஃபார்முலாவை கடைப்பிடித்தால், தமிழகமே தன் காலடியில் கிடக்கும் என்று நினைத்தார்.
ரூ.500 கோடி செலவழித்து 5% ஓட்டா? தினகரனை கிழித்து தொங்கவிட்ட சின்னம்மா!
அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று சசிகலா சொன்னதை மீறி நின்றார். சசிகலாவிடம் இருந்து 500 கோடி ரூபாயை வம்படியாகப் பிடுங்கி தன்னுடைய தலைமைக்காக செலவழித்தார். அ.திமு.க.வை விட அ.ம.மு.க. நிறைய வாக்குகள் வாங்கும் என்று நினைத்தார். ஆனால், எல்லாமே மண்ணாப் போச்சு. இதுதான், தமிழகத்தின் ஐந்து முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்கு சதவீதம்.
திமுக கூட்டணி: 2.23 கோடி வாக்குகள் 52.64%
அதிமுக கூட்டணி: 1.28 கோடி வாக்குகள் 30.28%
அமமுக: 22.25 லட்சம் வாக்குகள் 5.25%
நாம் தமிழர் கட்சி: 16.45 லட்சம் வாக்குகள் 3.88%
மக்கள் நீதி மய்யம்: 15.75 லட்சம் வாக்குகள் 3.72%
கமல்ஹாசனாவது தன்னுடைய இமேஜிக்காக கொஞ்சம் பணம் செலவழித்தார். கமல்ஹாசன் மொத்தமே 60 கோடி ரூபாய் செலவழித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அது எதுவும் அவரது பணம் இல்லை என்பதுதான் முக்கியம். நாம் தமிழர் வேட்பாளர்களுக்காக சீமான் பத்துப் பைசாகூட கொடுக்கவில்லை. ஆனாலும், நின்று தோற்றுப் போனார்கள்.
இவர்கள் எல்லாவற்றையும்விட, 500 கோடி ரூபாய் செலவழித்து மொத்தமே 5 சதவீதம் வாக்கு வாங்கியதாகச் சொல்வது என்ன அர்த்தம் என்று சசி கொந்தளித்திருக்கிறார். சசியை சந்திக்கப் போன பிரமுகரிடம், ‘உண்மையில் தினகரன் பணம் செலவழித்தானா அல்லது பணத்தை அமுக்கிக் கொண்டானா? 500 கோடி ரூபாயை நான் எப்படியெல்லாம் சம்பாதித்தேன் தெரியுமா என்று அழுது புலம்பியிருக்கிறார்.
அதுசரி, கல் உடைச்சு சம்பாதிச்சதா.. விடுங்க மேடம்.